2025 மே 15, வியாழக்கிழமை

உள்ளூராட்சிமன்ற தேர்தல் போட்டிக்கான நடவடிக்கைகள் தீவிரம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கிண்ணியா நகரசபை மற்றும் பிரதேசசபை ஆகியவற்றின் உள்ளூராட்சிமன்ற தேர்தல் போட்டிக்கான நடவடிக்கைகளில் தற்போது பல அரசியல்  கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இத்தகைய கட்சிகளில் போட்டியிடுவோர் தமது ஆதரவாளர்களை இரவு நேரங்களில் வீடுகளில் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.

கிண்ணியா நகரசபை மற்றும் பிரதேசசபையின் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து இவ்விரு சபையினையும் வெற்றி கொண்டது.

இத்தேர்தலில் ஐ.தே.கட்சி  தனித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தும் தேசிய முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் போட்டியிடவுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .