2025 மே 15, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண சுகாதாரத்துறைக்கு விருது

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(எஸ்.எஸ்.குமார்,எம்.பரீட்)

தேசியதர விருது வழங்கும் விழாவில் கிழக்கு மாகாண சுகாதாரத்துறை விருதுகளை வென்றெடுத்துள்ளது.

இவற்றுக்கு காரணமானவர்களைப் கௌரவிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் அலஸ்தோட்டம் லோட்டஸ் பார்க் விடுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாணத்திலுள்ள சுகாதாரத்துறை சார்ந்த 120 பேர் கலந்துகொண்டனர். கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், மாகாணசபை தவிசாளர் சட்டத்தரணி எம்.எச்.எம்.பாயிஸ், பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி, பிரதம செயலாளர் வே.பொ.பாலசிங்கம், சுகாதார அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அசீஸ், திருகோணமலை பொதுவைத்தியசாலை பணிப்பாளர் ஈ.ஜி.ஞானகுணாளன் உட்படப் பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .