Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜனவரி 19 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை சீனக்குடா மீன்பிடி துறைமுக பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இல.- 6 5 தியவர கம்மானய, இறனவில, அம்பகந்தவில பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தன வாமராஐக் (வயது 33) என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் மீன்பிடி தொழிலுக்காக திருகோணமலைக்கு வந்தவரென்றும் தனது நண்பர்களுடன் இரவுச் சாப்பாட்டை முடித்த பின்னர் வெளியே சென்ற அவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரியிடம், நண்பர் தெரிவித்தார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை அரசினர் பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தானியகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago