2025 மே 15, வியாழக்கிழமை

கிழக்கு முதலமைச்சர் கந்தளாய்க்கு விஜயம்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 05 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் நேற்று வெள்ளிக்கிழமை கந்தளாய்ப் பிரதேசத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டார். இங்கு விஜயமளித்த முதலமைச்சர், வெள்ளத்தினால் பாதிப்புற்று அகதிகளாக முகாம்களில் தஞ்சமடைந்த மக்களையும் பார்வையிட்டார்.

கந்தளாய் வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் மூன்றாவது முறையாகவும் இடம்பெயர்ந்த பேராற்றுவெளி பிரதேச மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஆயிஷh மகளிர் மகா வித்தியாலத்திற்கு விஜயமளித்த முதலமைச்சர், அங்கு பள்ளிவாயல் நிர்வாகிகள், பிரதேசத்தின் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடியதோடு பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் அகதிகளுக்கான உணவு வழங்கல்கள் பற்றியும் ஏதாவது இடையூறுகள் உள்ளதா என்பது பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

மக்களிடம் உரையாடிய முதலமைச்சர் குறைகள் பற்றிக்கேட்டபோது தங்களின் அனேக பொருட்கள் வெள்ளத்தினால் சென்றதனால் தூங்குவதற்கு பாய்கள் கூட இல்லையெனக் குறிப்பிட்டனர். அதைக்கேட்டறிந்த முதலமைச்சர் உடனடியாக பாய்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .