2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மூதூர் பிரதேசத்திற்கான போக்குவரத்து முற்றாக தடை

Super User   / 2011 பெப்ரவரி 05 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேசத்திற்கான போக்குவரத்து பாதைகள் யாவும் முற்றாக தடைப்பட்டுள்ளது.

இதனால் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு வழங்கும் செயற்பாடுகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெறுகின்றன.

மூதூர் பிரதேசத்தின் அநேகமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இப்பிரதேசத்தில் உள்ள 42 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளப்பிரளயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பொது இடங்களிலும் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X