2025 மே 15, வியாழக்கிழமை

திருகோணமலை மாவட்டத்திற்கு விசேட வைத்திய குழு

Super User   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மூதூர், ஈச்சிலம்பற்று, வான் எல மற்றும் தம்பலகாமம் ஆகிய பகுதிகளுக்கு நான்கு விசேட வைத்திய குழுக்களை அனுப்பிவைப்பதற்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக தேவைப்படும் வைத்தியர்களை கந்தளாய் பொது வைத்தியசாலையிலும், மாவட்ட பொதுச் சுகாதார உத்தியோகஸ்தர்களையும் இச்சேவையில் ஈடுபடுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் முகாம்களில் தங்கியுள்ளவர்களில் பிரசவத்துக்காக நெருங்கிய நாட்களை கொண்ட கர்பிணி தாய்மார்களை பாதிக்கப்படாத வைத்தியசாலைகளில் உடனடியாக கொண்டு சென்று அனுமதிக்குமாறும் மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு மாகாண அமைச்சர் சுபைர் பணிப்புரைவிடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .