2025 மே 15, வியாழக்கிழமை

மூதூரில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் சிரமதானம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 10 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

மூதூரில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் குடிநீர் கிணறுகளை இறைத்து சுத்தப்படுத்திக் கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

'ஹேயரிங் ஹேன்ஸ்' நிறுவனத்தின் அனுசரணையில் மூதூர் ஜன்னாஹ் சமூக அபிவிருத்தி மையத்தின் பங்களிப்பில் மூதூர் நீர்வழங்கல்சபையின் தலைமை பொறியியலாளர் ஏ.சீ.எம்.ஜெசீமின் வழிகாட்டலில் குடிநீர் கிணறுகளை சுத்தப்படுத்திக் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதேவேளை, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால்; வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வீடுகளை கழுவி சுத்தப்படுத்தும் வகையில் தொற்றுநீக்கி வழங்கப்படுவதோடு, குடிநீர் கிணறுகளை சுத்தப்படுத்துவதற்காக குளோரினும் வழங்கப்படுகிறது.

வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் மீளக்குடியேறுவோர் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் குழந்தைகள் விடயத்தில் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளுமாறும் கொதித்தாறிய நீரை பருகுமாறும் மூதூர் சுகாதா வைத்திய அதிகாரி டாக்டர். வை.எம். ஜெஸ்மின் ஆலோசனை கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .