2025 மே 15, வியாழக்கிழமை

பணமோசடியில் ஈடுபட்ட நபர் பொலிஸாரினால் கைது

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்ஸலாம் யாசீம்)

கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் இயங்குகின்ற தனியார் நிறுவனமொன்றினைச் சேர்ந்த நபரொருவர், திருமலையில் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டு விசாவினை பெற்றுக்கொடுப்பதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் 9 இளைஞர்களிடம் வெளிநாட்டு விசாவினை பெற்றுக்கொடுப்பதாகக் கூறி 36 லட்சம் ரூபாவினை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே மேற்படி நபர் கைது செய்யப்பட்டு இன்று திருமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபரினை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இப்பண மோசடிபற்றிய மேலதிக விசாரணைகளை திருமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .