Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை இலவச வைத்திய முகாம் உப்புவெளி சர்வோதய நிலையத்தில் நடைபெறவுள்ளது.
இளைளுர்களுக்கான நாளை எனும் நிறுவனத்தினால்
சர்வோத அமைப்பு, லியோ கழகம், லயன்ஸ் கழகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வைத்திய முகாமின் இணைப்பாளர் பொறுப்பை திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையம் ஏற்றுள்ளது.
கண் பரிசோதனை முகாம், நடமாடும் பற்சிகிச்சை முகாம், இருதய வைத்திய சிகிச்சை, நீரழிவு நோய், உயர் குருதி அமுக்கம், கொலஸ்ரோல் என்பவற்றுக்கான வைத்திய சிகிச்சை, சகல வித பரிசோதனைகளுக்கான ஆய்வு கூட வசதிகள் போன்ற சிகிந்சைகள் இடம்பெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும், இளைஞர் நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் வைத்திய முகாம் நடைபெற உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago