Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 10 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் அறிவியல் கண்காட்சியொன்று எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி முதல் 27 வரை கிண்ணியாவில் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக கிண்ணியா வலய பாடசாலை அதிபர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று வியாழக்கிழமை கிண்ணியா வலயக் கல்வி அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
வலயக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.காசிம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அறிவியல் கண்காட்சியின் செயலாளர் சி. நவரத்தினம் கலந்து கொண்டு கண்காட்சி தொடர்பான விளக்கங்களை அளித்தார்.
இக்கூட்டத்தில், முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான நஜீத் ஏ. மஜீத் கலந்துக் கொண்டார். இவர் இங்கு உரையாற்றுகையில்,
கல்விக்கு நிற பேதமில்லை. அரசியல் பேதங்கள் அற்று கல்விக்காக கடமையாற்ற வேண்டும். கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களில் கிண்ணியா கல்வி வலயம் கூடுதல் சிறப்பு பெற வேண்டும். இதனை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசியல்வாதிகள் முட்டுக்கட்டை போடாமல் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .