Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Super User / 2011 மார்ச் 20 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலம் கிண்ணியாவில் நிருபிக்கப்பட்டுள்ளது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன் உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.
நடைபெற்ற முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிண்ணியாவில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.
இதனால் கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா பிரதேச சபை என்பவற்றை ஐக்கிய தேசிய கட்சி கைப்பற்றியது.
தற்போது முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டதால் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியை தழுவியுள்ளது.
தற்போது கிண்ணியா நகர சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6,876 வாக்குகளையும்,
ஐக்கிய தேசிய கட்சி 3,727 வாக்குகளையும் ஜமாஅதே இஸ்லாமி சார்பான சுயேட்சை குழு 3,285 வாக்குகளையும் பெற்றுள்ளன.
ஜமாஅதே இஸ்லாமி சார்பான சுயேட்சை குழு வேட்பாளர் பட்டியலில் பெரும்பாலானேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களே இருந்தார்;கள்.
எனவே இக்குழு பெற்ற பெரும்பான்மை வாக்குகள் சுதந்திர கட்சி சார்பான வாக்குகள் என்பதாகும்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றது முஸ்லிம் காங்கிரஸே என்பதில எவ்வித சந்தேகமுமில்லை.
அதேபோல கிண்ணியா பிரதேச சபையில் கடந்த முறை ஐக்கிய தேசிய கட்சி 5,524 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3,926 வாக்குகளையும் பெற்றிருந்தது.
தற்போது குறித்த சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6,471 வாக்குகளையும்,ஐக்கிய தேசிய கட்சி 3,579 வாக்குகளையும் பெற்றுள்ளன.
எனவே முஸ்லிம் காங்கிரஸின் மாற்றமே இந்த இரு சபைகளின் வெற்றிகளை தீர்மாணிக்கின்றன என்பது தெளிவாகின்றது.
கிண்ணியாவில் முஸ்லிம் காங்கிரஸின் வாக்குப்பலம் குறித்து மாற்றுக் கருத்துள்ளோருக்கு இந்த தேர்தல் முடிவுகள் சிறந்த விளக்கத்தைக் கொடுக்கும் என எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .