2025 மே 14, புதன்கிழமை

மதுபோதையில் காணப்பட்ட பெண் கைது

Suganthini Ratnam   / 2011 மார்ச் 23 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை இலிங்கநகர் பகுதியில் மதுபோதையில் காணப்பட்ட பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்,  மது அருந்தி விட்டு வீடுகளுக்கு கல்லால் வீசி சேதமாக்குவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் இவர் கைதுசெய்யப்பட்டதாக  பொலிஸார் கூறினர்.

இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதான பெண்ணொருவரே இவ்வாறு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  கைதான பெண் மது அருந்தினரா என்று திருகோணமலை பொதுவைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, சட்ட வைத்திய அதிகாரி குறித்த பெண் மது அருந்தியதை உறுதிப்படுத்தினார்.

இவரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .