2025 மே 14, புதன்கிழமை

மூதூர் தளவைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தம்

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 14 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் தளவைத்தியசாலை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை காலை 8.00 மணிமுதல் 10.00 மணிவரை திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியை பார்வையிடுவதற்காக நோயாளர் விடுதிக்குள் அத்துமீறி பிரவேசித்த ஒருவர் அங்கு கடமையிலிருந்த வைத்தியரோடு முறைகேடாக பேசியது சம்பந்தமாக குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி வைத்தியசாலை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மூதூர் வைத்தியசாலைக்கு வருகை தந்த ஏ.எம்.கரீஸ் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பலனாக வேலைநிறுத்தம் காலை 10.00 மணியளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இன்று புத்தாண்டு தினமாக இருந்தபோதும் வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான நோயாளர்கள் வருகை தந்திருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X