2025 மே 14, புதன்கிழமை

இயங்காத மருத்துவமனைகளை விரைவில் இயங்க வைக்க ஏற்பாடு: அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

நாடெங்கிலும் இயங்காதுள்ள 97 மருத்துவமனைகளை இயங்கச் செய்வதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படுமென்பதுடன், எதிர்வரும் மே மாதம்   மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்களென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஹோமரன்கடவெல் பிராந்திய வைத்தியசாலையை நேற்று சனிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

45    மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வைத்தியசாலையில் ஆண்கள், பெண்களுக்கக்ன தனியான 2 வார்ட் தொகுதிகள், மகப்புற்று  வார்ட்தொகுதி, பல்மருத்துவ சிகிச்சை நிலையம், ஆய்வுகூடங்கள் என்பன அமைக்கப்பட்டுள்ளன.

மருத்து உபகரணங்கள், கணினித் தொகுதி என்பவற்றை  மருத்துவர் ஜெகத் விமலரத்தனவிடம் அமைச்சர் வழங்கி வைத்ததுடன்,   மாங்கன்று ஒன்றையும் நாட்டினார்.

இதன்போது, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.சுபைர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம, புத்தசாசன பிரதி அமைச்சர், எம்.கே.டி.எஸ்.குணவர்தன, கிழக்கு  மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் சில்வா,  கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி மற்றும்  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகளெனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X