2025 ஜூலை 05, சனிக்கிழமை

விதவைகளின் வாழ்வாதாரத் திட்டம் குறித்து கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 24 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

கிழக்கு மாகாணத்திலுள்ள சுமார் ஐம்பது ஆயிரம் விதவைகளின் வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால நலன்களை கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட திட்டம்  தொடர்பான கலந்துரையாடலொன்று நாளைமறுதினம் நடைபெறவுள்ளது.

நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு மத்திய வங்கி ஆளுநர் அஐப்த்  நிவாட் கப்ராலை அவரது அலுவலகத்தில் சந்தித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கலந்துரையாடவுள்ளார்.

இந்தத் திட்டத்தின் பிரதியொன்றை மத்திய வங்கி ஆளுநரிடம் கையளிக்கவுள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஒத்துழைப்பையும்; உதவியையும் கோரவுள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சும் சமூக சேவைகள் அமைச்சும் இணைந்து இந்தத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .