Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Super User / 2011 மே 18 , மு.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியாவில் இடம்பெறவுள்ள கிழக்கின் மாபெரும் அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தெரிவித்;தார்.
இக்கண்hட்சி எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கிண்ணியா
மத்திய கல்லூரி, அல்-அக்ஸா கல்லூரி, அல்ஹிறா முஸ்லிம் மகளிர் மகா
வித்தியாலயம் மற்றும் அப்துல் மஜீது வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள 16 கல்வி வலயங்களிலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகளிலிருந்தும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் இதில் கலந்து கொள்வர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் ஒவ்வொரு தினமும் முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் என பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025