2025 ஜூலை 05, சனிக்கிழமை

வெருகல் துவாரகா வித்தியாலய பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2011 மே 19 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

வெருகல் துவாரகா வித்தியாலத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர்கள் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தரம் 1 தொடக்கம் 11 வரையான வகுப்புகள் உள்ள இப்பாடசாலையில் சுமார் 482 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இப்பாடசாலைக்கு 23 ஆசிரியிர்கள் தேவையான போதும் 14 ஆசிரியர்களே கடமையாற்றுகின்றனர்.

அண்மைய இடமாற்றத்தின் போது இப்பாடசாலையிலிருந்த 8 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்ட்டு அவர்களுக்கு பதிலாக 2 ஆசிரியர்களே நியமிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒரு ஆசிரியர் நீண்ட கால விடுமுறையில் உள்ளதுடன் மற்றவர் வேறு பாடசாலைக்கு பதிலாக இணைக்கப்பட்டுள்ளார்.
 
இப்பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் தங்களது பாடசாலைக்கு இணைக்கப்பட வேண்;டும் அல்லது தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே பெறறோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .