2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிண்ணியாவில் அறிவியல் கண்காட்சி

Menaka Mookandi   / 2011 மே 23 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார், எம்.பரீட்)

கிண்ணியா அறிவியல் கண்காட்சி இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் இதனை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை அமைச்சர்களான து.நவரெத்தினராஜா, எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.சுபைர் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான அ.பரசுராமன், எம்.அன்வர்அலி, நிமால் காமினி ஙேவவிதாரண, ந.வரதன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எம்.எச்.பாயிஸ் தலைமையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிண்ணியா மத்திய கல்லூரி, அல்அக்ஜா கல்லூரி, அல்ஹிரா பெண்கள் கல்லூரி என்பனவற்றில் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றது.

இதனை பார்வையிட வரும் வெளிமாவட்ட மாணவர்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து வசதிகளும் தங்குமிடங்களும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் 16 கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களது ஆக்கங்களுடன் இலங்கையின் பிரபல்யம் வாய்ந்த நிறுவங்களின் காட்சி கூடங்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் சேகரிக்கப்படும் நிதி கிண்ணியா கல்வி வலயத்தின் விஞ்ஞான துறையின் அபிவிருத்திக்கு செலவிடப்படும் என்று கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எம்.பாயிஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • imran Tuesday, 24 May 2011 08:12 PM

    என்னத்த பாக்காரோ?

    Reply : 0       0

    mufa Thursday, 26 May 2011 05:53 PM

    there many mistake in the Provincial council stall.

    Reply : 0       0

    ahamed Saturday, 28 May 2011 04:33 AM

    என்ன தொடர்பு எனக்கும் கல்விக்கும்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .