2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் அகழ்வாராய்ச்சி

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவில்  பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள பிரதேசசபைக்குச் சொந்தமான பொதுச் சந்தை கட்டட எல்லைக்குள் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1952ஆம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு தொல்பொருள் ஆராய்ச்சி நடந்ததாகவும் பின்னர் 1972ஆம் 1978ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட  அகழ்வராய்ச்சி நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக கைவிடப்பட்டிருந்ததாகவும் தொல்பொருள் ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் சமாதானமான சூழ்நிலை  உருவாகியுள்ளதால் மீண்டும் தாம் இங்கு அகழ்வாராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .