2021 மே 06, வியாழக்கிழமை

கிண்ணியாவில் பாடசாலை மேம்பாட்டு திட்டம்: அடுத்த வருடம் ஆரம்பம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 23 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட சகல பாடசாலைகளிலும் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை (Program for School Improvement) நடைமுறைப்படுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.காசிம் தெரிவித்தார்.

இந்த திட்டத்தின் முன்னோடியாக இப்பிரதேச பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் பற்றி அறிவூட்டும் செயலமர்வுகள் தற்போது கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றன.

2006ஆம் ஆண்டு கல்வி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக இச்செயற்றிட்டம் முன்னெடுக்கபப்படவுள்ளது. 1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துக்குப் பதிலாக இத்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .