Super User / 2011 டிசெம்பர் 29 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் மஹ்பூப் உஸ் சமானை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பு கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது, சமகால அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படதாக நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மருந்து பொருட்களை நன்கொடையாக வழங்குமாறு இதன்போது கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், திருகோணமலை மாவட்ட மாணவர்கள் பங்களாதேஷ் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு புலமைப்பரிசில் வழங்குமாறும் உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரை திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இச்சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அழைப்பு விடுத்துள்ளார்.
44 minute ago
48 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
48 minute ago
3 hours ago
3 hours ago