2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வயல் காவலுக்குச் சென்ற விவசாயி யானை தாக்குதலில் காயம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 16 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)         

கிண்ணியா, கண்டல்காட்டில் வயல் காவலுக்குச் சென்ற ஒருவர் கட்டு யானை தாக்கியதால் பலத்த காயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

கிண்ணியா, பூவரசந்தீவைச் சேர்ந்த முகம்மது பாரூக் (வயது 48) என்பவரே பலத்த காயங்களுக்கு உள்ளானவராவர். இவர் உடனடியாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா பிரதேசத்தில் கண்டல் காடு, தினேரி, கெங்கை போன்ற பகுதியில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X