Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 13 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
'குற்றச் செயல்களைத் தடுத்தல்' தொடர்பான கலந்தரையாடலொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மூதூர் அக்கரைச்சேனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மூதூர் பொலிஸ் பொறுப்பதிகாரிகளோடு மூதூர் தவிசாளர் ஏ.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறப்பினர் அபு உபைதா ராஸிக் பரீட், மஜ்லிஸ் அஸ்ஸுறா தலைவர் மௌலவி எம்.எம்.கரீம் நத்வி, மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் வீ.எம். காலித்தீன், உலமா சபைத் தலைவர் எச்.எம். ஹரீஸ் நத்வி உட்பட பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கலந்தரையாடலில் பல்வேறு தேவைகள் நிமித்தம் இரவு வேளையில் வீதியில் செல்வோர் கைது செய்யப்படுவதாகவும் இதனால் பொலிஸாருக்கம் பொதுமக்களுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதாகவும் இதனைப் போக்குவதற்கு தகுந்த காரணமின்றி எவரையும் கைதுசெய்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் பொதுமக்கள் தரப்பில் எடுத்துக்கூறப்பட்டது.
அத்தோடு, களவு முதலான குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
28 minute ago