2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

வலைகளை பயன்படுத்தி தொழில் செய்வோர் மீது தடை எற்படுத்த வேண்டாம் என கோரிக்கை

Super User   / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை சல்லி பே கடற்பரப்பில் மீன் பிடி வலைகளை பயன்படுத்தி தொழில் செய்வோர் மீது தடை எற்படுத்த வேண்;டாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டடுள்ளது.

இக்கோரிக்கை கடற்தொழில் நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயிடம் தூண்டில் தொழில் செய்யும் மீனவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோணேஸ்வரம் கடற்பரப்பில் பல வருட காலமாக  தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் தொழிலிலை 43 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதியில் மீன்பிடி படகுகளில் வருவோர் வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மீன் பெருக்கமம் இப்பகுதியில் குறைந்த வருகின்றது. இதனால் எமது தொழில் எதிர்காலத்தில் முற்றாக  பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X