Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2012 பெப்ரவரி 29 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் 120 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை, நெல்சன்புர சுனாமி வீடமைப்பு திட்டம் இன்று புதன்கிழமை மக்களிடம் கையளிக்கப்பட்டது.
80 வீடுகளை கொண்ட இந்த வீட்டு திட்டத்திலுள்ள வீடுகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ பயனாளிகளிடம் கையளித்தார். மூவினத்தவர்களையும் சேர்ந்த 80 பயனாளிகளுக்கு இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சுமார் 17 மில்லியன் ரூபா செலவில் நெல்சன்புர மற்றும் ஜமாலியா ஆகிய பிரதேசத்தில புனரமைக்கப்பட்ட இரண்டு நெற் களஞ்சியசாலைகளையும் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ திறந்து வைத்தார்.
இந்நிகழ்வுகளில் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, கடற்றொழில் நீரியல் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநலேமே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
23 minute ago
33 minute ago
1 hours ago