2025 மே 03, சனிக்கிழமை

மூதூர் பிரதேச விவசாயிகளுக்கு எள்ளு விதைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 மார்ச் 18 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

இலங்கை 'உள்ளத்திற்கான சக்தி கிராமிய சக்தி' என்னும் அமைப்பினால் எள்ளு உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்ககு எள்ளு விதைகள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

புத்தசாசன சமய விவகாரங்கள் அமைச்சின் மூதூர் தொகுதி அமைப்பாளர் எம்.முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தசாசன சமய விவகாரங்கள் அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் மாலனி மெனிக்கே குணவர்த்தன, கிராமிய சக்தி அமைப்பின் தலைவர் நலின் மில்ரோய் குணவர்த்தன, தேசிய இணைப்பாளர் தர்மசேன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

எள்ளு உற்பத்தியில் ஈடுபடவுள்ள விவசாயிகளுக்கு நிதி உதவிகளும் இவ்வமைப்பினால் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X