2025 மே 03, சனிக்கிழமை

ஈ.பி.டி.பி. உறுப்பினர் கொலை

Suganthini Ratnam   / 2012 மார்ச் 18 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                            (அமதோரு அமரஜீவா)

திருகோணமலை, குச்சவெளியின் பெரியகுளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது சடலத்திற்கு அருகில் இருந்து 'எல்.ரீ.ரீ.ஈ.' என எழுதப்பட்ட காகிதத்தையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
 
மூதூரைச் சேர்ந்த ரகு நடன் அல்லது முத்து என மேற்படி நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலம் முச்சக்கரவண்டியின் உள்ளே காணப்பட்டது. காலை வேளையில் மேற்படி நபர் இனந்தெரியாத இரு நபர்களுடன் சென்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

மேற்படி நபர் 15 – 20 வருடங்களாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராக இருந்தவர் எனவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இவர் மறைந்திருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இவர் இராணுவ உளவாளியாக செயற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.   
 
யுத்தம் முடிவடைந்த பின்னர் மேற்படி நபர்  முச்சக்கரவண்டி சாரதியதாக தனது தொழிலை மேற்கொண்டு வந்தார். (டெய்லிமிரர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X