Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Super User / 2012 மார்ச் 18 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன்)
இலங்கைக்கு எதிராக ஜெனீவாலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையின் தாக்கம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் படையினருக்கு அறிவூட்டும் கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை, உவர்மலை விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றது.
கனிப்பொருள் கூட்டுத்தாபன தலைவரும் ஜெனிவா பிரேரனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்; தலைவருமான மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டப்ளியூ.டி.சொய்ஸா, பாதுகாப்பு செயலாளரின் இணைப்புச் செயலாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் சரத் சந்திர, சிவில் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் றியர்; அட்மிரல் ஆனந்த பீரிஸ், பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ.எம்.பத்திரன, தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர் அசித்த பிரசன்ன மற்றும் ஊவா மாகாண சபை உறுப்பினர் மேஜர் சுதர்சன தெனுபிட்டிய உள்ளிட்ட பலர் பேச்சாளர்களாக கலந்துகொண்டனர்.
திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் அனைத்து பிரதேச சிவில் பாதுகாப்பு குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் முப்படையினர் என பலர் இந்நிகழ்வில் கலந்தகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago