Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 மார்ச் 21 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
தேசிய சமாதானப் பேராவையின் வட மாகாணத்தை உள்ளடக்கிய சர்வ மத தலைவர்கள் குழுவொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சர்வ மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினரை கொண்ட மேற்படி குழுவினர் திருகோணமலை மாவட்ட சர்வ மதத் தலைவர்களையும், சிவில் சமூகத்தினரையும் புளியங்குளம் 3 ஆம் கட்டை சர்வோதய மாவட்ட நிலையத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.
தேசிய சமாதானப் பேரவை செயற்றிட்ட இணைப்பதிகாரி சாகீர் முகம்மட், மாவட்ட இணைப்பாளர் ஏ.எல்.ரபாய்தீன் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், மற்றும் சிறுவர்களினது அடையாளம் காணப்பட்ட மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான ஆற்றலை வழங்குவதும், இவ்வாறான தேவைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான ஊக்கத்தை ஏற்படுத்துவதுமே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகுமென தெரிவிக்கப்பட்டது.
மேற்படி குழுவினர் இன்று புதன்கிழமை மட்டக்களப்புக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
49 minute ago
51 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
51 minute ago
58 minute ago
1 hours ago