2025 மே 03, சனிக்கிழமை

கிராமத்திற்கு ஒரு அபிவிருத்தி வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பம்

Super User   / 2012 மார்ச் 23 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட், ரமன்)


கமநெகும திட்டத்தின் கீழ் ஒரு கிராமம் ஒரு செயற்திட்டம் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 31 வேலைத்திட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயகத்தின் பிரதான நிகழ்வு அண்ணல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிரதேச செயலாளர் எஸ்.கிருஷ்னேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான எம்.எஸ்.தௌபீக் கலந்து கொண்டார்.

இதேவேளை, திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியால மத்திய வீதியின் இரு புறத்திலுள்ள பாடசாலை கட்டிடங்களை இணைக்கும் மேம்பாலத்திற்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.

கமநெகும திட்டத்தின் கீழ் கிராமத்திற்கு ஒரு திட்டம் என்ற கருத்திட்டத்தின் கீழ் ரூபா ஒரு மில்லியன் செலவில்; இந்த மேம்பாலம் அமைப்பதற்கான நிதி மீன்பிடித்துறை பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமையினால் வழங்;கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் திருகோணமலை வலய கல்வி பணிப்பாளர் க.முருகுப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மத்திய வீதியின் இரு புறத்திலும் உள்ள பாடசாலையின் வகுப்பறைகளுக்கு செல்வதில் மாணவர்களும் ஆசிரியர்களும் பலத்த சிரமங்களை எதிர்நோக்கியதுடன் வீதி விபத்துக்கள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X