2025 மே 03, சனிக்கிழமை

கிழக்கில் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களை கண்டுபிடிக்க இராணுவத்தினர் தேடுதல்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும் ஏனைய ஆயுதக்குழுக்களையும் சட்டவிரோத ஆயுதங்களையும் கண்டுபிடிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலை அன்புவழிபுரம், திருகோணமலை – அநுராதபுரம் சந்தி ஆகிய பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி; சந்தேக நபர் ஒருவர், இந்தியாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை வந்திருப்பதாக கூறியதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவ்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (அமதோரு அமரஜீவா)

You May Also Like

  Comments - 0

  • neethan Tuesday, 03 April 2012 08:51 PM

    ஜெனீவா அமர்க்களம் முடிவுற்ற நிலைமையில் மக்களது விலைவாசி உயர்வு, வாழ்க்கை செலவு பிரச்சனைகளை திசை திருப்புவதில் மற்றுமொரு குண்டு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X