2025 மே 03, சனிக்கிழமை

கொழும்பு – திருகோணமலை கடுகதி ரயிலில் எக்ஸ்போ சொகுசு பெட்டி இணைப்பு

Super User   / 2012 ஏப்ரல் 03 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு செல்லும் கடுகதி ரயிலில் பிரயாணிகளின் நலன்கருதி எக்ஸ்போ லங்கா நிறுவனம் சகல வசதிகளுடனான குளிரூட்டப்பட்ட எக்ஸ்போ சொகுசு ரயில் பெட்டியொன்றை கடந்த ஏப்ரல் முதலாம் திகதி ஞாயிறுக்கிழமை முதல் இணைத்துள்ளது.

வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய தினங்களில் கொழும்பிலிருந்து இரவு 9 புறப்படும் இந்த ரயில் அதிகாலை 5.10 திருகோணமலையை சென்றடையும்.

இதேவேளை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் திருகோணமலையிலிருந்து 7.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதிகாலை 4.05 மணிக்கு கொழும்பை வந்தடையும்.

குறித்த சொகுசு ரயில் பெட்டியில் பயணிக்கும் பிரயாணிக்கு ஒரு வழி பயணத்திற்காக 1,900 ரூபா அறவிடப்படுகின்ற நிலையில் 3 – 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 1,450 ரூபா அறவிடப்படுகின்றது.

இதில் பிரயாணிகளுக்கு குளிரூட்டி சேவையுடன் இரவு நேர சாப்பாடு, வரையறையற்ற தேநீர் மற்றும் கோப்பி ஆகியன இலவசமாக பரிமாறப்படுகின்றன.

ஏற்கெனவே கொழும்பிலிருந்து கண்டி, பதுளை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கான கடுகதி ரயிலில் இது போன்ற எக்ஸ்போ சொகுசு ரயில் பொட்டி இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • Malaiyan Wednesday, 04 April 2012 01:07 PM

    நல்ல முயற்சி! தொடரட்டும்

    Reply : 0       0

    Lion B.Uthayashankar JP Wednesday, 04 April 2012 03:36 PM

    It is happy to hear the said servives and thanks for take care over trincomalee train services at least now, also it is suggested to have the fare 1500/ with dinner and morning coffee or tea. Also tickets are sold in colombo fort and trincomalee station?

    Regards.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X