2025 மே 03, சனிக்கிழமை

அமைச்சர் றிசாட் பதியுதீன் கிண்ணியா விஜயம்

Super User   / 2012 ஏப்ரல் 08 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீன் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்று ஞாயிற்றுகிழமை திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயம் மேற்கொண்டார்.

கிண்ணியா நகர சபை தவிசாளர் டொக்டர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப் தலைமையில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலும் அமைச்சர் கலந்துகொண்டார்.

அத்துடன், கிண்ணியா - கட்டையாறு பகுதியில் தையற் பயிற்சி நிலையத்தினை திறந்து வைத்ததுடன் கிண்ணியா, சோலை வெட்டுவான் மீள்குடியேற்றப்பட்ட கிராமத்திற்கும் அமைச்சர் றிசாட் பதியுதீன் விஜயம் மேற்கொண்டார்.

இந்நிகழ்வுகளில் அமைச்சருடன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் மற்றம் கட்சியின் கொள்கை பரப்பு  செயலாளர் முபாறக் மௌலவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X