2025 மே 03, சனிக்கிழமை

புலிகள் இயக்கம் உயிர் வாழ்வதை ஜெனீவா சென்ற போது அறிய முடிந்தது: அமைச்சர் றிசாட்

Super User   / 2012 ஏப்ரல் 08 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)


"புலிகளுடைய போராட்டம் முடிந்து விட்டது. அந்த இயக்கம் அழிந்து விட்டது என நாம் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த இயக்கம் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதை ஜெனீவா சென்ற போது அறிய முடிந்தது" என கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் றிசாட் பதுயுதீன் தெரிவ்த்தார்.

கிண்ணியா பிரதேச முஸ்லிம்களின் எதிர்நோக்கியுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்  கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எம்.எம். ஹில்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் சகோதரர்கள் வந்து அவர்களின் போராட்டங்களின் நியாயங்களையும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன்வைத்தனர்.

அந்த மாநாட்டில் பல மொழிகளைப் பேசுகின்ற தமிழ் சகோதர்களைக் கண்டோம். 15 மொழிகள் பேசுபவர்கள் கூட அங்கு  கலந்துகொண்டு தழிழ் இனத்திற்னாக குரல்கொடுத்தார்கள். தமிழ் மக்களை அழைத்து பல்வேறு கூட்டங்களை அந்த பேரவையில் நடாத்தினார்கள்.

தமிழ் ஈழத்துக்காக போராடியது புலிகள் இயக்கம்;. அதேவேளை இந்தியா மூலம் பெற்றுக்கொடுக்க வந்த அதி கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட வட கிழக்கு இணைந்த மாகாண சபை முறைமை இந்த இரண்டு தீர்வுகளும் ஏதோ ஒருவகையில் பின்னடைந்திருப்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

எனினும் அமெரிக்காவும் மேற்கத்தைய நாடுகளும் ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த வகையில் தமிழ் மக்களின் பிரச்சினை பெரிதாகப் பேசப்படுகின்ற சர்வதேசப் பிரச்சினையாக இன்று மாறியிருக்கிறது. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சர்வதேசம் பேசுகின்ற அளவுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

இது எதைச் சொல்கிற என்றால் ஒரு இனத்தின் உரிமைப் போராட்டம் அழிந்து சென்றாலும் அவர்களின் இழப்புக்களும் தியாகங்களும் அவர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என்ற உண்மை புலப்படுத்துகின்றது. 

இந்தவகையில் முஸ்லிம் சமூகம் ஆயுதம் ஏந்தி தங்களுக்கு ஒரு நாடு தேவை அல்லது ஒரு மாவட்டம் தேவை அல்லது ஒரு பிரதேசம் தேவை என்று போராடவில்லை.தவிர காணி அதிகாரமோ பொலிஸ் அதிகாரமோ கேட்டவில்லை. இருந்த போதும் முஸ்லிம் சமூகம் பல  பாதிப்புக்களையும் அநியாயங்களையும் எதிர்கொண்டு சொத்துக்களையும் இழந்தது.

இன்று இந்த அரசாங்கத்தோடு எல்லா முஸ்லிம் கட்சிகளும் இணைந்திருக்கின்றன. இந்த நாடு இரண்டாகப் பிளவுபடுவதை முஸ்லிம் சமூகம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை. இந்த நாட்டில் விசுவாசம் கொண்ட முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்குகின்ற பூர்வீகக் காணி தொடர்பான பிரச்சினைகள் எமக்கு கவலையளிகின்றன.

கிண்ணியா பிரதேச மக்கள் எதிர்நோக்குகின்ற காணி தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்து தீர்த்து வைப்பேன் என உறுதி அளிக்கின்றேன். எங்களுடைய சமூகத்தின் நிலை மிக மோசமாக பின் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. எங்களுடைய பிரச்சினைகள் பற்றி இலங்கையில் பேசுவதற்கு யாரும் இல்லை. அத்துடன் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கும் யாரும் இல்லை.

முஸ்லிம் அரசியல் வாதிகள் தங்களுடைய பதவிக் காலங்களை தங்களின் சுகபோகங்களுக்காக மாற்றியமைத்து சமூகத்தை ஏமாற்றும் பேர்வழிகளாக மாறிறுள்ளனர்.

யுத்ததத்தால் முஸ்லிம்கள் இழந்த உரிமைகளையும் இழப்புக்களையும் மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்குக் கூட மக்கள் ஆணையை பெற்றிருக்கிறோம் என்று கூறிக்கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற உறுபினர்கள் வாய் பேசமுடியாது மௌனித்துப் போய் இருக்கிறார்கள்.

காணிப் பிரச்சினை கிண்ணியாவில் மட்டுமல்ல அம்பாறையில் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இன்று சிறு சிறு விடயங்களைக் கூட கையாள்வதற்கு ஒரு சரியான அரசியல் தலைமைத்தும் இல்லாத நிலை காணப்படுகிறது" என்றார்.

You May Also Like

  Comments - 0

  • aj Monday, 09 April 2012 03:25 AM

    இவரின் பேச்சி இருந்து இவரின் உண்மை குணத்தை அறியமுடிகிறது. யப்பா.. என்னத்த செய்தலும் எத்தனை வருடம் போனாலும் இலட்சியத்தை அடைவது உறுதி . அதில் இவர்கள் போல பலர் வருவார்கள் போவர்கள் .

    Reply : 0       0

    aussilan Monday, 09 April 2012 09:34 AM

    பாவம் இவர் ஜெனீவா போகாவிட்டால் தமிழர் உரிமை தெரிந்திருக்காது??? இனி அரசியல்வாதிகள், அமைச்சர்கள், எல்லோரயும் ஜெனீவா அனுப்ப வேண்டும். குடுத்து வச்ச றிசாட் !!

    Reply : 0       0

    jeyarajah Monday, 09 April 2012 12:59 PM

    ஐயா ரிசாத், உரிமையைப் பற்றியும் இன உணர்வு பற்றியும் கதைப்பதற்கு மக்களின் பிரச்சனை என்ன என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும். ஜெனீவா மட்டும் அல்ல, பலஸ்தீனம் சென்று பாருங்கள் விளங்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X