2025 மே 03, சனிக்கிழமை

திருமலை, முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஏப்ரல் 10 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

திருகோணமலை மாவட்ட முஸ்லிம்  பாடசாலைகள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்ப குமார,  கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல், கிண்ணியா நகரபிதா எம்.எம்.ஹில்மி, மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஜவாப்தீன் ஜஸ்ரி மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, முஸ்லிம் பாடசாலைகள் ஆளணி மற்றும் பௌதீக வளப்பகிர்வு முதலானவற்றில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதோடு, முஸ்லிம் பாடசாலைகளின் ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு போதிய நடவடிக்கை எடுக்குமென்று தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, பௌதிக வளப்பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரினால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதெனவும் உறுதி கூறப்பட்டது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X