2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மூதூர் தள வைத்தியசாலைக்கு உபகரணங்கள் கையளிப்பு

Super User   / 2012 ஏப்ரல் 15 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில், கஜன், சி.குருநாதன்)


மூதூர் தள வைத்தியசாலைக்கு கமநெகும திட்டத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வைத்திய உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மூதூர் தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தலைவரும் திருகோணமலை மாவட்ட முன்னாள நாடாளுமன்ற உறுப்பினருமான கே.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மூதூர் அபிவிருத்தி குழுத் தலைவருமான  எம்.எஸ்.தௌபீக் கலந்துகொண்டு வைத்திய அத்தியட்சகர் டாக்டர் வி.பிரேம் ஆனந்திடம்  வைத்திய உபகரணங்களை கையளித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அபு உபைதா ராஸிக் பரீட், மூதூர் பிரதேச சபை தலைவர் ஏ.எம்.ஹரீஸ், பிரதேச சபை உறுப்பினர்களான பி.டி.எம். பைஸர், எம்.பி.நஸீர், மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி சுக்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, திருகோணமலை ரொட்டறி கழகத்திளால் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் நேற்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .