2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிழக்கில் பாரிய தேடுதல் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படாத முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள்  ஆகியோரை கண்டுபிடிக்கும் முகமாக கிழக்கு பிராந்தியத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பயங்கரவாத புலனாய்வுத்துறை திணைக்களமும் வேறு அரசாங்க புலனாய்வு அமைப்புகளும்; இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

விசாரணையின் பின்னர் இவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்புவதா அல்லது இல்லையா என்பதை அதிகாரிகள் தீர்மானிப்பார்கள்.

இதன்போது எவரும் கைதுசெய்யப்படப் போவதில்லையெனவும் இருப்பினும்; முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை  அடையாளம் காணும் நடவடிக்கையே மேற்கொள்ளப்படும். (அமதோரு அமரஜீவா)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .