2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இடி, மின்னல் தாக்கியதில் கிண்ணியாவில் இருவர் காயம்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 25 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கிண்ணியா பிரதேசத்தில் இன்று புதன் கிழமை மாலை இடி மின்னலுடன் கனத்த மழை பெய்தது. கிண்ணியா பிரதேசத்தில் இடி, மின்னல் தாக்கி ஒரு வீடு சேதமாகியுள்ளதுடன் மூதாட்டியொருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை கிண்ணியா, பைசல் நகர் பகுதியில் உள்ள றியாத் நகரில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் காயமடைந்தவர் பாத்திமா என்பவராவர்.

இடி, மின்னல் தென்னை மரத்தில் பட்டு வீடொன்றில் விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளதுடன், தண்ணீர் தாங்கி வெடித்து அதிலிருந்த கொங்கிறீட் தூண் உடைந்துள்ளது. இதனால் மின்சார உபகரணங்கள் பல சேதமடைந்துள்ளன.

அதேவேளை போன் அழைப்பு பேசிக் கொண்டிருந்த இன்னொருவர் இத்தகைய மின் தாக்குதலில் காயமடைந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .