2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் 'லவிங் ட்ரிங்கோ - 2012' கடற்கரைத் திருவிழா

Suganthini Ratnam   / 2012 ஜூன் 01 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன், கஜன்)


திருகோணமலையில் எதிர்வரும் ஜுலை மாதம் நிர்மாணம், வியாபாரம்,  உல்லாசத்துறை  ஆகியன சம்பந்தமான  கடற்கரை களியாட்ட நிகழ்வு  ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜுலை மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதிவரை 5  தினங்கள் திருகோணமலையில் உள்ள டச்சு  கடற்கரையில் இந்த களியாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளதாக கிறீன் கிளசிக் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஏ.யு.எல்.ஏ.ஹில்மி தெரிவித்தார்.

கடற்படை, இராணுவம், விமானப்படை ஆகியவற்றின் களியாட்டம், சாகசம்,  நீர் விளையாட்டுக்களும் நடைபெறவுள்ளதுடன்,  40 காட்சிக்கூடங்களும் 80 விற்பனை நிறுவனங்களும் அமைக்கப்பட உள்ளன எனவும் அவர் கூறினார்.  

இதற்கான  ஏற்பாடுகளை கிறீன் கிளசிக் நிறுவனம் மேற்கொண்டு வருவதுடன்,  திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம் ஊடக அனுசரணை வழங்கவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .