2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சிவப்பு பாலம் ஆற்றில் நீராடிய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 10 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன், பரீட்)

தம்பலகாமம் - கிண்ணியா வீதியில் சிவப்பு பாலம் என்னும் இடத்தில் நீராடிய 16 வயது சிறுவன் நீரில் மூழ்கி மரணமாகி உள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய் என்னும் இடத்தைச் சேர்ந்த சிறுவன் தம்பலகாமம், பொற்கேணி என்னும் இடத்தில் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் மரணமாகி உள்ளார்.

உறவினர்கள் சகிதம் இப்பாலத்தின் அருகில் நீராடிய நிலையில் இந்த சம்பவம்   இடம்பெற்றுள்ளது. மதியம் 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்ப  கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X