2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

சமுர்த்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலை மாவட்ட சமுர்த்தி அதிகாரசபை  உத்தியோகத்தர்களும் முகாமையாளர்களும் அரசாங்கத்திற்கு  ஆதரவு தெரிவித்தும் மக்கள் விடுதலை முன்னணிக்கு  எதிர்ப்புத்   தெரிவித்தும் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை நகரசபையின் வாகனத் தரிப்பிடத்தில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சமுர்த்தி அதிகாரசபையை திவிநெகும திணைக்களமாக  மாற்றுவதற்கு ஏற்ப  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள  சட்டமூலத்திற்கு ஒரு சில தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. 

இது குறித்து அவர்கள் நீதிமன்றில் வழக்கும் தாக்கல் செய்துள்ளனர். இந்த  நிலையில்,  இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

தமது உத்தியோகத்தர்தகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு சில தீயசக்திகள் முனைகின்றதாகத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .