2025 மே 08, வியாழக்கிழமை

திருமலையில் பல்கலை பொறியியல் பீடத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 17 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

இலங்கை  ஒப்பந்தக்காரர் சங்கம் திருகோணமலை கிளையின் 11ஆவது பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சண்சயின் விடுதியில் நடைபெற்றபோது திருகோணமலை மாவட்டத்தில் இருந்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்கு தெரிவான 10 மாணவர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், கிழக்கு  மாகாண  கல்வி அமைச்சின் பாடசாலைகள் வேலைப்பகுதி பணிப்பாளர் எந்திரி எஸ்.பேராசிரியன் பிரதம அதிதியாகவும் நீர்பாசன  திணைக்கத்தின் பிரதி பணிப்பாளர் வி.ராஜகோபாலசிங்கம், கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

சங்கத்தின் தலைவர் க.வாமதேவா தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் புதிய வருடத்துக்கான  தலைவராக ஏ.எம்.எம்.நசீர், செயலாளராக எஸ்.ஜெகதீசன், பொருலாளராக ஸ்ரீலால் அத்தநாயக்காவும் தெரிவு செய்யப்பட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X