2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் கிண்ணியா விஜயம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 21 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக ஜனாப் அப்துல் மஜீத் மொஹமட் நஜிப் நாளை சனிக்கிழமை பிற்பகல் தனது பிறந்த சொந்த பட்டிணமான கிண்ணியாவிற்கு விஜயம் செய்யவிருக்கின்றார். 

கொழும்பிலிருந்து விசேட விமான மூலம் சீனன்வாடி விமான நிலையத்தை சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வந்தடையவிருக்கும் முதலமைச்சரை அங்கிருந்து இஸ்லாமிய பாரம்பரிய கலாசார முறைப்படி வரவேற்று சீனடி மற்றும் சிலம்படி நிகழ்வுகளுடன் கிண்ணியா பாலம் ஊடாக ஊர்வலமாக கிண்ணியா பட்டிணத்திற்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடாகியுள்ளது.

அன்று மாலை கிண்ணியா பொது விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்படவிருக்கின்றது. வரவேற்பு நிகழ்வை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிண்ணியா பிரதேச மத்திய செயற்குழுவும் மூதூர் ஸ்ரீலங்கா ஆசிரியர் சங்கமும் முற்போக்கு கலா மன்றமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .