2025 மே 10, சனிக்கிழமை

சம்பூரில் வெடிப்புச் சம்பவம்; பெண் காயம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 25 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, சம்பூர் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 38 வயதான பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பூர் பகுதியில் உள்ள காயமடைந்தவரின் வீட்டு வளாகத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பெண் குப்பைகளைக் கூட்டி தீ வைத்தபோதே இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்திற்கான காரணம் குறித்து இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், கிடைத்த பொருட்களை பயன்படுத்தி செய்யப்பட்ட  வெடிப்புச் சாதனம் ஒன்றின் காரணமாகவே இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாகவும் கூறினர். (ஏ.ஏ.)

You May Also Like

  Comments - 0

  • m.sounthararajah Sunday, 25 November 2012 08:18 AM

    சம்பூரில் இன்னும் மக்கள் குடியேரவில்லை எப்படி பெண் ஒருவர் காயமடைவது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X