2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சுற்றுலாத்துறையின் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 30 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீத்,
ஹனீக் அஹமட்)

இலங்கை சுற்றுலாத்துறையின் வளர்ச்சி, செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் தொடர்பான கருத்தரங்கு திருகோணமலையில் நடைபெற்றது.

திருகோணமலை அலஸ் தோட்டத்தில் உள்ள சாயாபுளு ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை இந்த கருத்தரங்கு நடைபெற்றது.

திருகோணமலை வர்த்தக சம்மேளனம், ஏஸியா பவுன்டேஷன் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கலந்துகொண்டார். அத்துடன் கிழக்கு மாகாண விவசாய கால்நடை மீன்பிடி கிராமிய அபிவிருத்தி சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட், சுகாதார சமூக சேவைகள் அமைச்சர் எம்.வை.மன்சூர் வர்த்தக சம்மேளத்தின் தலைவர் வி.கலைச்செல்வன் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .