2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வயோதிபப் பெண் சடலமாக மீட்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 30 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத், கஜன்)

கிண்ணியா பிரதேசத்தில் ஆலங்கேணிப் பகுதியில் வயோதிப பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆலங்கேணியைச் சேர்ந்த கந்தையா செல்லமா (வயது 65) என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டவராவார்.

இவரின் வாயில் துணியால் கட்டப்பட்டிருந்தாகவும் தலையிலும், உடம்பிலும் இரத்தக் காயங்கள் காணப்படுவதாவும், வீட்டிலிருந்த அலுமாரிகள் திறக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர். இது தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .