2025 மே 10, சனிக்கிழமை

'மக்களின் பங்களிப்புடன் செயற்றிட்டங்களை முன்னெடுக்குபோது அபிவிருத்தியை இலகுவாக எட்ட முடியும்'

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)


மக்களின் பங்களிப்புடன் செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்றபோது, அதன் ஊடாக அபிவிருத்தியை  இலகுவாக எட்ட முடியும் என கிழக்கு மாகண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

பாம் பவுண்டேஷன் அமைப்பு கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டுவரும் தமது வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண உள்ளூராட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடத்தியது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

கிழக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்கள் தங்களது அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றன. அவர்கள்  அனைவரும் உரிய பொதுமக்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுச் செயற்படுவார்களாயின் கிழக்கு மாகாணத்தில் மிக இலகுவில் மேலும் பல அபிவிருத்தியை  எட்ட முடியும்' என்றார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி அலுவலகத்தின் பொறியியலாளர் எல்.சித்திராதேவி,  பாம் பவுண்டேஷன் அமைப்பின் கிழக்கு மாகாணத் திட்ட முகாமையாளர் எஸ்.பாஸ்கரன் உட்பட கலந்து கொண்டனர்.

பாம் பவுண்டேஷன் அமைப்பு கிழக்கு மாகாணத்தில் யு.எஸ்.எயிட்டின் நிதியுதவியுடன் 324 மலசலகூடங்கள், 1000 குடும்பங்களுக்கான குடிநீர்த் திட்டம் ஆகியவற்றை மேற்கொள்ளவுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தத் திட்டத்திற்கு பொறுப்பான திட்ட முகாமையாளர் ரீ.பாலமுரளி தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் நீர் சுகாதாரத்திட்டம், நிலையான களப்புக்களும் வாழ்வாதாரமும், மகளிர் ஊக்குவிப்புத்திட்டம், சமூக நல்லாட்சியுடனான உட்கட்டுமானத்திட்டம் போன்ற பொறிமுறையின் கீழும் பல  செயற்றிட்டங்களை இந்த அமைப்பு எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X