2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

குச்சவெளியில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


2013ஆம் ஆண்டுக்கான 'தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் சேவை நடைபெற்றது.

குச்சவெளி திஃவிவேகானந்தா மகாவித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற இந்த நடமாடும் சேவையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் ஆரம்பித்து வைத்தார்.

மத்திய வங்கி, விவசாயத் திணைக்களம், தொழில் திணைக்களம், நில அளவைத் திணைக்களம், புவிச்சரித்திரவியல் திணைக்களம், காணி திணைக்களம் உட்பட சுமார் 19 திணைக்களங்கள் இந்த நடமாடும் சேவையில் மக்களுக்கான சேவையை வழங்கின.

அத்துடன் தேசிய அடையாள அட்டை, முதியோர்களுக்கான அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதன்போது முதியோர்களுக்கான அடையாள அட்டைகளும் சமுர்த்தி திட்டத்தின் கீழான வாழ்வாதாரக் கடன் உதவியும்  உடனடியாக வழங்கப்பட்டன. திருமணப் பதிவின்றி இருந்த மூன்று தம்பதிகளுக்கு திருமணப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

அடையாள அட்டை, கடவுச்சீட்டுக்கான  புகைப்படங்களை இலவசமாக எடுப்பதற்கு அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று உதவியளித்தது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .