2025 மே 10, சனிக்கிழமை

ராஜேந்திரம் அன்டனி ஆண்டகை காலமானார்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 03 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


திருகோணமலை - மட்டக்களப்பு கத்தோலிக்க மறைமாவட்ட முன்னாள் ஆயர் அதிமேதகு அருட்கலாநிதி லியோ ராஜேந்திரம் அன்டனி ஆண்டகை இன்று காலை திருகோணமலையில் காலமானார்.

யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்துறை, கரம்பொன் பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆயர் 1973ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயராக பணிபுரிந்து 1983ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

1927ஆம் ஆண்டு பிறந்த இவர் 1954ஆம் ஆண்டில் குருவானவராக பட்டம்பெற்றார். 1958ஆம் ஆண்டு மறைமாவட்டத்தின் ஆயராக பணிபுரிந்த ஆயர் அதிமேதகு இக்னேசியஸ் கிளனியின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஆயர் அன்டனி, 1973ஆம் ஆண்டில் திருகோணமலை  மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் உதவி ஆயராக நியமிக்கப்பட்டார்.

கிளனி ஆண்டகை அதே ஆண்டு பதவியிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பாப்பரசர் 6ம் சின்னப்பரால் நியமிக்கப்பட்டு பணிபுரிந்தார். மறைந்த ஆயரின் பூதவுடல் திருகோணமலை உவர்மலையில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் இன்று முதல் எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை வரை பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அன்று மாலை திருகோணமலை புனித மரியாள் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 6ஆம் திகதி காலை 10 மணிவரை ஆலயத்தில் வைக்கப்படும்.

அதன் பின்னர் இலங்கையின் அனைத்து ஆயர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆயர்கள், மறைமாவட்ட குருக்களால் நடத்தப்படும் விசேட நல்லடக்க திருப்பலியை அடுத்து பூதவுடல் மரியாள் பேராலயத்தின் திருப்பலிப்பீடத்தில் அடக்கம் செய்யப்படும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X