2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிண்ணியா வலய கல்வி அலுவலகம் இடமாற்றம்

Super User   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}



(எம்.பரீத், கியாஸ் ஷாபி)


கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் இன்று  செவ்வாய்க்கிழமை முதல் புதிய நிரந்தர இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கிண்ணியா வலய கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் இடம்பெற்ற இடமாற்றம் செய்யப்பட்ட நிரந்தர அலுவலகத்தின் திறப்பு விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, முதலமைச்சர் நஜீப். ஏ.மஜீத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் முன்னர், உப்பாறு அல் - ஹிதாயா வித்தியாலயத்தில் தற்காலிகமாக இயங்கி வந்தது.
இந்நிலையிலேயே சுனாமியால் பாதிக்கப்பட்ட கிண்ணியா வைத்தியசாலை காணியிலேயே இந்த புதிய கட்டிடம் தற்போது அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .